கோதுமை மா இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்த தடை - எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்!!

கோதுமை மா இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்த தடை - எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்!!

அனுமதியற்ற கோதுமை மா இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்த தடையைத் தொடர்ந்து உள்ளூர் கோதுமை மா விநியோகஸ்தர்கள், பில்லியன் கணக்கான ரூபாயில் வருமானத்தை ஈட்டியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது பொது நிதிக்கான குழுவின் அண்மைய கூட்டத்தின் போது வெளிப்படுத்தப்பட்டது.

பொது நிதி விவகாரங்களை மேற்பார்வையிடும் முக்கியமான நாடாளுமன்ற அமைப்பான பொது நிதிக்கான குழு, நேற்று அதன் பதில் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் கூடியது.

இதன்போது, இரண்டு நிறுவனங்களும் பெற்றதாகக் கூறப்படும் இலாபங்களின் துல்லியமான அளவைக் கோடிட்டுக் காட்டும் விரிவான அறிக்கையை எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளதாக ரணவக்க தெரிவித்துள்ளார்.

கோதுமை மா இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்த தடை - எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் | Wheat Flour Import Price In Sri Lanka

இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, உள்நாட்டு கைத்தொழில்களை பாதுகாக்கவும் அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்கவும் இறக்குமதி தடையை நிதியமைச்சு அறிமுகப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த இரண்டு நிறுவனங்களும் உயர்ந்த இலாப விகிதத்துடன் இயங்குவதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

கோதுமை மாவை கிலோ ஒன்றுக்கு 35 ரூபாய் வரியுடன் இறக்குமதி செய்தபோதும், அது கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்படுவது அவதானிக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.