நடுரோட்டில் நின்று காதலிக்கு கோல் எடுத்தவர் கைது...

நடுரோட்டில் நின்று காதலிக்கு கோல் எடுத்தவர் கைது...

கண்டி, கட்டுகஸ்தோட்டையில் தன்னுடைய காதலிக்கு கோல் எடுத்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நன்றாக கசிப்பு அருந்திவிட்டே காதலியையும் அவளுடைய சகோதர்களையும் காதலன் நடுசாமத்தில் திட்டிக்கொண்டிருந்துள்ளார்.

நடுரோட்டில் நின்று காதலிக்கு கோல் எடுத்தவர் கைது | Drunk Girlfriend Who Scored A Called Arrested

பொலிஸார் இரவு ரோந்து சென்று கொண்டிருந்தபோது , ​​கண்டி மாவில்மட பிரதேசத்தில் வீதியோரத்தில் முச்சக்கர வண்டி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதிருந்த ஒருவர் கடுமையான தூசன வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருப்பதை பொலிஸ் அதிகாரிகள் கண்டுள்ளனர்.

கசிப்பை குடித்துக்கொண்டே தொலைபேசியில் திட்டிக்கொண்டிருந்ததை பொலிஸ் அதிகாரிகள் அவதானித்தனர்.

நடுரோட்டில் நின்று காதலிக்கு கோல் எடுத்தவர் கைது | Drunk Girlfriend Who Scored A Called Arrestedசுமார் 30 வயது மதிக்கத்தக்க அவரிடம் விசாரித்த போது, இரவில் தனது காதலியை சந்திக்க அவரது வீட்டிற்கு வந்ததாகவும் அப்போது அளவுக்கு அதிகமாக கசிப்பு குடித்ததால் , காதலியின் சகோதரர்கள் அவரை அடித்து உதைத்ததாகவும் தெரியவந்தது.

அதன்பின், முச்சக்கரவண்டியை சாலையோரம் நிறுத்திவிட்டு, காதலிக்கு போன் செய்து, காதலியையும் , அவரது சகோதரர்களையும் திட்டியதாக தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்த போத்தலில் 750 மில்லி லீற்றர் கசிப்பு எஞ்சியிருந்ததுடன் , சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.