ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.

ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.

பசறை – மீதும்பிட்டிய பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உணவை உட்கொண்டதன் பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி | 6 Students Of A School Admitted To Hospitalகுறித்த பாடசாலையில் 8 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.