போராட்டத்திற்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

போராட்டத்திற்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

இலங்கையில் பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தயாராகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சின் பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளருமான  ஜி விஜேசூரியவின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதுள்ளதைக் கண்டித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

போராட்டத்திற்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்! | Protest By Government Medical Officers Srilan

இந்த செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் உரிய தீர்வு கிடைக்கப்பெற வேண்டும்  என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இல்லையெனில் பாரிய தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதை எவராலும் தடுக்க முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.