வங்கிகளில் அதிகரித்துள்ள டொலரின் பெறுமதி..!

வங்கிகளில் அதிகரித்துள்ள டொலரின் பெறுமதி..!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (18) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி குறைவடைந்துள்ளது

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 313.85  ரூபாய் முதல் 314.83 ரூபாய் மற்றும்  329.29 ரூபாய் முதல்  330. 31 ரூபாய் ஆக  அதிகரித்துள்ளது.

வங்கிகளில் அதிகரித்துள்ள டொலரின் பெறுமதி | Dollar Rate Continues To Increase At Banks Today

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 311.74 ரூபாய் முதல் 312.75 ரூபாயாகவும்,  விற்பனைப் பெறுமதி 326 ரூபாய் முதல் 328 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

சம்பத் வங்கியிலும், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே 315 ரூபாய் முதல் 317 ரூபாய் மற்றும் 327 ரூபாய் முதல் 329 ரூபாயாக அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.