மட்டக்களப்பில் வைத்தியர்களின் அஜாக்கிரதை - உயிர் தப்பிய பெண்.

மட்டக்களப்பில் வைத்தியர்களின் அஜாக்கிரதை - உயிர் தப்பிய பெண்.

மட்டக்களப்பு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற உண்மைச் சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பதிவாகி உள்ளது.

அங்கு மகப்பேறுக்காக சென்ற பெண் ஒருவர் குழந்தை கிடைத்து வீடு திரும்பிய பின் 47 நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு சென்றால் இவர்கள் கூறிய காரணம் "அது ஒன்றுமில்லை வழமையாக வரக்கூடிய வலிதான் என்று ....

மட்டக்களப்பில் வைத்தியர்களின் அஜாக்கிரதை - உயிர் தப்பிய பெண் | Incident The Carelessness Of Doctors In Batticaloa

அதன் பிறகு மற்றுமொரு வைத்தியரிடம் சென்று பரிசோதித்தபோதுதான் வயிற்றுக்குள் பஞ்சு இருந்து அது எடுக்கப்படாமல் கிரிமித்தொற்றாகிய விசயம் கண்டுபிடிக்கப்பட்டது.

வைத்தியர்களின் அஜாக்கிரதையால் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் உயிர்ச்சேதம் நடந்திருந்தால் யார் பொறுப்பு தற்போது அந்த தாய் நலமாக இருக்கிறார்.

இதற்கு நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகள் எடுத்து பாதிக்கப்பட்ட அந்த தாய்க்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்." என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.