மருந்தகத்தினால் வழங்கப்பட்ட மருந்தை உட்கொண்டதால் நபர் உயிரிழப்பு.

மருந்தகத்தினால் வழங்கப்பட்ட மருந்தை உட்கொண்டதால் நபர் உயிரிழப்பு.

இங்கிரிய பிரதேசத்தில் தனியார் மருந்து கடையொன்றினால் வழங்கப்பட்ட மருந்தை உட்கொண்ட நபர் ஒருவர் உயிரிழந்த சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) உயிரிழந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இங்கிரிய, உருகல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய டபிள்யூ.லீலாரத்ன என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்தகத்தினால் வழங்கப்பட்ட மருந்தை உட்கொண்டதால் நபர் உயிரிழப்பு | Death Of A Person Consumption Tablet By A Pharmacyகொலஸ்ட்ராலுக்கு வைத்தியர் பரிந்துரைத்ததன் பிரகாரம் மருந்தகத்தினால் அவருக்கு மருந்து வழங்கப்பட்டதாகவும், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மருந்தை உட்கொண்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

இது தவறான மருந்தினால் ஏற்பட்ட மரணமா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.