சீன கப்பலுக்கு அனுமதி - நெருக்கடியில் சிக்கியுள்ள ரணில் அரசு..!
இலங்கைக்கு வருகை தரவுள்ள சீன கப்பலிற்கு அனுமதி வழங்குமாறு கொழும்பிலுள்ள சீன தூதரகம் விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரை தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் இராஜதந்திர பிரிவின் இயக்குநர் பிரியங்க விக்கிரமசிங்க கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த வேண்டுகோள் தொடர்பில் வழமையான இராஜதந்திர நடைமுறைகளை அமைச்சு பின்பற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சீன கப்பல் ஒக்டோபர் 25 ம் திகதி இலங்கை வரவுள்ளது நவம்பர் 11 ம் திகதி கப்பல் இலங்கையில் தரித்துநிற்கும் என சிறி லங்கா கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் இது அனுமதி வழங்கப்படுகின்றதா என்பதை பொறுத்த விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தில் அதிகரித்துள்ள பதட்டங்கள் காரணமாக முன்னர் வழமையான துறைமுக விஜயங்களாக காணப்பட்டவை தற்போது சவால்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் அரசாங்கம் நெருக்கடியான நிலையில் உள்ளது என முன்னாள் இராஜதந்திரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சீன கப்பலின் வேவுபார்க்கும் திறன் குறித்த இந்தியாவின் கரிசனைகளை நிராகரிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.