இலங்கை சுங்கம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்..!

இலங்கை சுங்கம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்..!

சுங்கத் திணைக்களம் தொடர்பான தகவல்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் வகையில் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகளில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாக இலங்கை சுங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுங்க லெட்டர் ஹெட்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் மாத்திரமன்றி சுங்க அதிகாரிகளின் பெயர்களையும் மோசடி செய்பவர்கள் பயன்படுத்தி வருவதாக இலங்கை சுங்கத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை சுங்கம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல் | Customs People Misusing Its Name

மேலும், அறியப்படாத நபர்களின் கணக்குகளில் பணத்தை வைப்பிலிடுமாறு தாம் ஒருபோதும் கோரமாட்டோம் என இலங்கை சுங்கம்உறுதியளித்துள்ளது.

அத்துடன்,  இவ்வாறான மோசடி நடவடிக்கைகள் மற்றும் அதில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் இலங்கை சுங்கத்திற்கு அறிவிக்குமாறு பொது மக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.