தாயை கழுத்தறுத்து படுகொலை செய்த மகன் - தென்னிலங்கையில் பயங்கரம்..!

தாயை கழுத்தறுத்து படுகொலை செய்த மகன் - தென்னிலங்கையில் பயங்கரம்..!

கம்பஹா - திவுலப்பிட்டிய பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக மூன்று பிள்ளைகளின் தாய் வெட்டிப் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடூர சம்பவம் இன்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த குடும்பப் பெண்ணை அவரின் மூத்த மகனே கத்தியால் கழுத்தறுத்துப் படுகொலை செய்துள்ளார்.

52 வயதுடைய பெண்ணே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

தாயை கழுத்தறுத்து படுகொலை செய்த மகன் - தென்னிலங்கையில் பயங்கரம் | Dead Body Recovered Today Drug Used Sri Lanka

சந்தேகநபரான 27 வயதுடைய மகனைக் கைது செய்துள்ள காவல்துறையினர், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்று காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.