இரத்மலானை துப்பாக்கிச் சூடு - பொலிஸார் வெளியிட்ட தகவல்..!

இரத்மலானை துப்பாக்கிச் சூடு - பொலிஸார் வெளியிட்ட தகவல்..!

இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பல பிரிவுகளின் கீழ் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்று (21) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் மேற்கொள்ளப்படுள்ளது.

இந்நிலையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள இறைச்சிக் கடை உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் இரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இரத்மலானை துப்பாக்கிச் சூடு - பொலிஸார் வெளியிட்ட தகவல் | Rathmalana Gun Shoot Police Investigation

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ,

“இதுவரை யார் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர் என்பது தெரியவரவில்லை. மேலும் உயிரிழந்தவர் எதற்காக கொல்லப்பட்டார் என்பது இதுவரை தகவல் வெளியாகவில்லை. 

இதுகுறித்து விசாரணை நடத்த பல குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. 

சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டுக்குள் இதுவரை சுமார் 60 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நாட்டில் நடந்துள்ளன. அதில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 28 பேர் காயமடைந்துள்ளனர் என நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.