கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்..!
கிளிநொச்சி ஏ9 வீதி - காக்கா கடைச் சந்தி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து (22.08.2023) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று பேர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.