ஹப்புத்தளையில் பிரதான சாட்சியாளர் சுட்டு கொலை.

ஹப்புத்தளையில் பிரதான சாட்சியாளர் சுட்டு கொலை.

ஹப்புத்தளையில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் தெற்கில் இடம்பெற்ற பாரிய கொலைச் சம்வத்தின் பிரதான சாட்சியாளர் என தெரியவந்துள்ளது.

ஹப்புத்தளை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியிலேயே நேற்றிரவு துப்பாக்கிச் சூடு இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்த நிலையில் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹப்புத்தளையில் பிரதான சாட்சியாளர் சுட்டு கொலை | Main Witness Shot Dead In Haputhalaதெற்கில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் பிரதான சாட்சியாளரான துப்பாக்கி சூட்டில் பலியான நபர் வழங்கிய சாட்சியின் பிரகாரம் தற்போது 6 பேர் சிறைச்சாலையில் சிறைப்பிடிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாகவும் நபருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகபேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் மாத்தறை, கந்தர பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.