குழந்தையுடன் தெப்பக்குளத்தில் குதித்து உயிர்மாய்த்த இளம் தாய்.

குழந்தையுடன் தெப்பக்குளத்தில் குதித்து உயிர்மாய்த்த இளம் தாய்.

லிந்துலையில் இளம் தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் தெப்பக்குளத்தில் குதித்து உயிர்மாய்த்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாயொருவரே இவ்வாறு உயிரை மாய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் சடலம் இன்று (23) காலை மீட்கப்பட்டுள்ள நிலையில் அவரின் ஒரு வயது குழந்தைக்கு என்ன நடந்தது என்பது இன்னும் தெரியாமல் உள்ளது.

குழந்தையுடன் தெப்பக்குளத்தில் குதித்து உயிர்மாய்த்த இளம் தாய் | Young Mother Jumped Into Theppakulam And Diedகுழந்தையின் சடலம் கிடைக்கப்பெறாததை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தோடு அவர் ஐந்து பக்கத்தில் கடிதமொன்றையும் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக் கடிதம், திருமண பதிவு அட்டை, தேசிய அடையாள அட்டை என்பவற்றை தெப்பக்குளத்துக்கு அருகில் வைத்துவிட்டே குதித்துள்ளார்.

தன்னையும் தனது குழந்தையையும் கணவரும் அவரின் குடும்பத்தாரும் துன்புறுத்தினர் என இக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.