மின்சாரத்தை கடத்தும் வடத்தில் இரதம் மோதுண்டதில் இருவர் உயிரிழப்பு.
பதுளையில் இரதம் ஒன்று அதிவேக மின்சாரத்தை கடத்தும் வடத்தில் மோதுண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை நமுனுகுல, பூட்டாவத்த பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை நமுனுகுல பூட்டாவத்தையில் இருந்து நேற்றிரவு மாதலாவத்த பகுதிக்கு சென்ற ரதம் மீண்டும் ஆலயத்திற்கு திரும்பும் வழியிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 27 மற்றும் 37 வயது மதிக்கதக்கவர்களே உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமமைடந்தவர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.