குழு மோதலில் பறிபோன உயிர்

குழு மோதலில் பறிபோன உயிர்

கொழும்பு, மட்டக்குளி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்குளி, ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை இரவு (24) இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

குழு மோதலில் பறிபோன உயிர் | Lives Lost In Group Conflict Colomboமோதல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றனர். இதன்போது , வெட்டுக்காயங்களுடன் வீதியில் கிடந்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின் அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மோதலில் காயமடைந்த மற்றுமொருவரான 28 வயதுடைய இளைஞர் சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.