இலங்கையில் மாமானாரால் மருமகன் சுட்டுக் கொலை.

இலங்கையில் மாமானாரால் மருமகன் சுட்டுக் கொலை.

மின்னேரியாவில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ, கல்லோயா பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாக மாமானாரால் மருமகன் இவ்வாறு சுட்டுக் கொன்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் மாமானாரால் மருமகன் சுட்டுக் கொலை | Son In Law Shot Dead By Father In Law In Sri Lankaஇந்த துப்பாக்கிச் சூடு நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளதுடன் காயமடைந்த நபர் மின்னேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரொட்டவெவ, கல்ஓயா பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.