பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் விபரீத முடிவு.
மாத்தறை கடற்கரையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (28.08.2023) காலை இடம்பெற்றுள்ளது.
அவர் தனது கடமை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மாத்தறை மாவட்ட நீதிமன்றில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.