கடைக்கு சென்ற சிறுமி மாயம்; பெற்றோர் முறைப்பாடு.

கடைக்கு சென்ற சிறுமி மாயம்; பெற்றோர் முறைப்பாடு.

வீட்டுக்கு அருகிலுள்ள கடையொன்றுக்கு சென்ற 15 வயது சிறுமியை யாரோ கடத்திச் சென்றதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி  கடத்தப்பட்டுள்ளதாக சிறுமியின் தந்தையான 57 வயதுடைய நபரே முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Missing Personசம்பவ தினமான நேற்று (27) மாலை 4 மணியளவில் தொலைபேசி அட்டை வாங்குவதற்காக கடைக்குச் சென்ற சிறுமி திரும்பி வர தாமதமானதால் சிறுமியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுமி மாயமான சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.