சிலாபத்தில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு.

சிலாபத்தில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு.

 சிலாபம் - இலிப்பதெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்தில் இலிப்பதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Hospital

உயிரிழந்தவர் சுமார் மூன்று வருடங்களாக தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சகோதரி வீட்டில் இல்லாத நேரத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.