அரசின் கொடுப்பனவுக்காக கத்திருந்த கிளிநொச்சி மக்களுக்கு ஏமாற்றம்!

அரசின் கொடுப்பனவுக்காக கத்திருந்த கிளிநொச்சி மக்களுக்கு ஏமாற்றம்!

கிளிநொச்சியில் இன்றைய தினம் அரசின் அஸ்வெஸ்ம நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் பலர் , மக்கள் வங்கியில் குவிந்துள்ளனர். எனினும் அஅவர்களில் சிலருக்கே கொடுப்பனவு அஸ்வெஸ்ம நலன்புரி கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் காத்திருந்தும் அஸ்வெஸ்ம நலன்புரி கொடுப்பனவு கிடைக்காத நிலையில் பலர் ஏமாற்றத்துடன் தமது வீடுகளுக்குத் திரும்பிச்சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் கொடுப்பனவுக்காக கத்திருந்த கிளிநொச்சி மக்களுக்கு ஏமாற்றம்! | Disappointment For The People Of Kilinochchiஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

அதன்படி இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 04 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதுடன் , அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கும் “அஸ்வெசும” திட்டத்தின் கீழ் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.