கோவிலுக்கு சென்று திரும்பும் போது நேர்ந்த விபத்து; 15 பேர் வைத்தியசாலையில்.

கோவிலுக்கு சென்று திரும்பும் போது நேர்ந்த விபத்து; 15 பேர் வைத்தியசாலையில்.

ராகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகலை – வலப்பனை பிரதான வீதியின் ஹரஸ்பெத்த பகுதியில் நேற்று மாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலப்பனை பிரதேசத்தில் உள்ள கோவிலுக்கு சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கோவிலுக்கு சென்று திரும்பும் போது நேர்ந்த விபத்து; 15 பேர் வைத்தியசாலையில் | Occurred While Returning From The Templeபாரவூர்தியின் பின்புறம் உள்ள பகுதியொன்று உடைந்து வீழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வலப்பனை மற்றும் ரிகில்லகஸ்கட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்து தொடர்பான விசாரணைகளை ராகலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.