கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் அதிரடி கைது! ஆடைக்குள் இருந்த மர்மம்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் அதிரடி கைது! ஆடைக்குள் இருந்த மர்மம்.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கற்களை வெளிநாட்டுக்கு கடத்த முற்பட்ட பெண்ணொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒருகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் அதிரடி கைது! ஆடைக்குள் இருந்த மர்மம் | Woman Arrested At Katunayake Airport Gemstones  

இன்றைய தினம் (30-08-2023) காலை கட்டுநாயக்கவில் இருந்து சென்னை நோக்கி பயணிக்க முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மாணிக்கக்கற்களின் எடை 2311.75 கிராம் என தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் அதிரடி கைது! ஆடைக்குள் இருந்த மர்மம் | Woman Arrested At Katunayake Airport Gemstones இவ்வாறு கைப்பற்றப்பட்ட மாணிக்கக்கற்களின் சந்தை பெறுமதி 29.1 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிலைய சுங்க அதிகாரிகளின் மேலதிக விசாரணைகளின் பின்னர், குறித்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.