சுற்றுலாவுக்கு வந்த மூவரில் ஒருவர் மாயம்.

சுற்றுலாவுக்கு வந்த மூவரில் ஒருவர் மாயம்.

ஹபராதுவயில் கடலில் நீராடச் சென்ற நபர் ஒருவர் சுழியில் சிக்கி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (30) மாலை கொக்கல கடலுவா பாலம், முகத்துவாரத்துக்கு அருகில் கடலில் நீராடச் சென்ற குழுவொன்றில் மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களில் இருவர் மீட்கப்பட்டதுடன் மற்றைய நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாவுக்கு வந்த மூவரில் ஒருவர் மாயம் | One Missing Person Was Three Person Went Swimmingபலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடவலவ பிரதேசத்தில் இருந்து சுற்றுலாவுக்கு வந்தவர்களில் மூவரே இவ்வாறு நீர்வீழ்ச்சியில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட இருவரும் களுகல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் முன்னெடுத்துள்ளதுடன் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.