மசாஜ் நிலையம் சென்ற வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த கதி.
பொத்துவில் பிரதேசத்திலுள்ள மசாஜ் நிலையமொன்றில் மசாஜ் செய்வதாக சென்ற 23 வயதுடைய வெளிநாட்டு யுவதியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அந் நபரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு யுவதி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மசாஜ் நிலையத்தில் பணியாளராக கடமையாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.