கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்!!
தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்று மீண்டும் நாடு திரும்பிய சந்தேகநபர் , பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் அத்துருகிரியவில் பிரபல லடியா கும்பலைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த வாரம் தலங்கம, கோரம்பே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்களில் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பிச் செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விமானம் புறப்பட்ட நேரத்தில் பொலிஸார் நீதிமன்றத்தில் பயணத்தடை பெற்றுள்ளனர்.
இதனையடுத்து சந்தேகநபர் சிங்கப்பூர் சென்றவுடன் சிங்கப்பூர் அதிகாரிகளால் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.