தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற பாரிய பண மோசடி - 07 பேர் கைது.

தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற பாரிய பண மோசடி - 07 பேர் கைது.

தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு வந்த நோயாளிகளிடம் போலியான  ரசிதுகளை (bill) வழங்கி பாரிய பண மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை நேற்று (31) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் விசாரணைகளின் முடிவில் 10,904,208 ரூபா மோசடி செய்தமை தெரியவந்துள்ளது.

தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற பாரிய பண மோசடி - 07 பேர் கைது | Money Fraud Private Hospital Arrestedஇந்நிலையில் பன்னிபிட்டிய, நிட்டம்புவ மற்றும் குருநாகல் பிரதேசங்களைச் சேர்ந்த 23 - 54 வயதுக்குட்பட்டவர்கள், மற்றும் றாகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான பெண் சந்தேகநபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை இன்று (01) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.