வவுனியாவில் இடம்பெற்ற அசம்பாவிதம்: பரிதாபமாக உயிரிழந்த 15 வயது சிறுவன்!

வவுனியாவில் இடம்பெற்ற அசம்பாவிதம்: பரிதாபமாக உயிரிழந்த 15 வயது சிறுவன்!

வவுனியா பகுதியொன்றில் உழவியந்திரம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம், பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற அசம்பாவிதம்: பரிதாபமாக உயிரிழந்த 15 வயது சிறுவன்! | Vavuniya Tractor Accident 15 Years Old Boy Death

விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்றைய தினம் (01-09-2023) மாலை குறித்த பகுதியில் உள்ள குளத்தின் அணைக்கட்டில் மண் ஏற்றியவாறு உழவியந்திரம் ஒன்று பயணித்துள்ளது.

இதன்போது தீடீர் என கட்டுப்பாட்டை இழந்த உழவியந்திரம் முற்றாக குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியது.

வவுனியாவில் இடம்பெற்ற அசம்பாவிதம்: பரிதாபமாக உயிரிழந்த 15 வயது சிறுவன்! | Vavuniya Tractor Accident 15 Years Old Boy Deathஇதனால் உழவியந்திரத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு பூவரசங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

இருப்பினும், முன்னமே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற அசம்பாவிதம்: பரிதாபமாக உயிரிழந்த 15 வயது சிறுவன்! | Vavuniya Tractor Accident 15 Years Old Boy Deathகுறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 14 வயதான ச.சதுசன் என்ற சிறுவன் மரணமடைந்ததுடன், மற்றொரு சிறுவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும், சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.