மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

மட்டகளப்பில் பிரபல போதைப் பொருள் வியாபாரி ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

மட்டகளப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே நேற்றைய தினம் (2023.09.01) காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 15 கிராம் 750 மில்லி கிராம் அளவிலான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது | Drug Dealer Arrested With Ice Drug In Batticaloa

இப்போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பொலிஸார் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.