மின்சார வேலியில் சிக்குண்டு கொம்பன் யானைக்கு நேர்ந்த சோகம்.

மின்சார வேலியில் சிக்குண்டு கொம்பன் யானைக்கு நேர்ந்த சோகம்.

புத்தளத்தில் யானையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் ஆனமடுவ செம்புவெவ பகுதியில் கொம்பன் யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த அப்பிரதேச மக்கள் புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அப் பகுதிக்கு வனிவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் சென்று உயிரிழந்த கொம்பன் யானையை பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வேலியில் சிக்குண்டு கொம்பன் யானைக்கு நேர்ந்த சோகம் | Kompan Elephant Death In Electric Fenceஇதன்போது கொம்பன் யானையின் தும்பிக்கை மின்சார வேலியில் சிக்குண்டு கொம்பன் யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த கொம்பன் யானை 9 அடி உயரமெனவும் 40 வயது மதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் தந்தம் 2 அரை அடி நீளம் கொண்டதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் இதன்போது தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த கொம்பன் யானைக்கு மிருக வைத்தியர் இசுருவினால் நாளை உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் இதன்போது தெரிவித்தனர்.

யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.