மின்சார கம்பியில் சிக்குண்டதில் 3 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த சோகம்.

மின்சார கம்பியில் சிக்குண்டதில் 3 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த சோகம்.

நுவரெலியாவில் விவசாய காணியில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட சாந்திபுர பகுதியில் இன்று அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார கம்பியில் சிக்குண்டதில் 3 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த சோகம் | Mother Of 3 Children After Death An Electric Wireஇவ்வாறு இறந்தவர் 3 பிள்ளைகளின் தாயான 45 வயதுடைய மைக்கல் எக்லஸ் என தெரிய வந்துள்ளது.

தனது விவசாய தோட்டத்திற்கு மரக்கறி வகைகளுக்கு நீர் பாய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த மின்சார கம்பியினை அப்புறப்படுத்த முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருவதோடு சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.