முச்சக்கர வண்டி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி.

முச்சக்கர வண்டி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி.

திருகோணமலையில் முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை - வெருகல், பூநகர் பகுதியில் இன்று (03.09.2023) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீதியோரத்தில் நின்ற மரம் ஒன்றின் மீது குறித்த முச்சக்கர வண்டி மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி | Three Wheel Accident In Trincomalee

இதன்போது முச்சக்கரவண்டியை செலுத்திய இரண்டு பிள்ளைகளின் தந்தையான 41வயதையுடைய தியாகராசா ஜெயச்சந்திரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெருகல் முருகன் ஆலயத்திற்கு சென்று வீடு திரும்புகையில் சாரதியின் நித்திரை காரணமாக  பூநகர் பகுதியில் வைத்து வீதியோரத்தில் நின்ற மரம் ஒன்றில் முச்சக்கரவண்டி மோதியுள்ளதாக பொலிஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.