வவுனியாவில் சேற்றினுள் புதையுண்ட யானையை மீட்கும் நடவடிக்கை முன்னெடுப்பு.

வவுனியாவில் சேற்றினுள் புதையுண்ட யானையை மீட்கும் நடவடிக்கை முன்னெடுப்பு.

வவுனியாவில் சேற்றினுள் புதையுண்ட நிலையில் 05 வயது யானையினை மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியில் இடம் பெற்றதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியிலே மாடு மேய்க்க சென்ற கிராமவாசி ஒருவர் புதையுண்ட நிலையில் யானை ஒன்று உயிருக்கு போராடுவதை அவதானித்திள்ளார்.வவுனியாவில் சேற்றினுள் புதையுண்ட யானையை மீட்கும் நடவடிக்கை முன்னெடுப்பு | Action Taken Elephant Buried In Mud In Vavuniya

இதனையடுத்து மாமடு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் யானையினை மீட்பதற்கான நடவடிக்கையினை வனஜீவராசிகள் திணைக்களம், பொலிஸார், மற்றும் கிராமமக்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.