உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியீடு.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியீடு.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (04) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தப் பரீட்சைக்கு 278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றியிருந்தனர்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியீடு | High Quality Exam Results Release Today

உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடும் பணியில் 20,000 ஆசிரியர்களும், 1,100 பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடந்த ஆண்டு நடைபெற இருந்த இந்த பரீட்சை, இந்த ஆண்டு ஜனவரி 23ம் திகதி முதல் பெப்ரவரி 17ம் திகதி வரை 2,200 பரீட்சை மையங்களில் நடைபெற்றது.