இலங்கையில் பேருந்தில் சென்ற பெண்ணுக்கு நடந்த பதைபதைக்கும் சம்பவம்!
அம்பலாந்தோட்டையில் பேருந்து ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மடயமலந்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பேருந்தில் பயணித்த பொழுது, அதே பேருந்தில் வலுக்கட்டாயமாக ஏறிய நபர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.