வவுனியாவில் விபத்து : காவல்துறை உத்தியோகத்தர் பலி..!

வவுனியாவில் விபத்து : காவல்துறை உத்தியோகத்தர் பலி..!

வவுனியா ஓமந்தை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதியில்  விளக்குவைத்தகுளத்தில் இடம்பெற்ற விபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

நேற்று இரவு (08) யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்த கப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வவுனியாவில் இருந்து புளியங்குளம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டது.

விபத்தில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த காவல்துறை உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் விபத்து : காவல்துறை உத்தியோகத்தர் பலி | Accident In Vavuniya Police Officer Died Spot

இது தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை காவல்துறையினர்  முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த விபத்தில் கண்டியை சேர்ந்தவரும் புளியங்குளம் காவல் நிலைய உத்தியோகத்தருமான  55 வயதுடைய கருணாதிலக்க என்பவரே உயிரிழந்துள்ளார்.