மக்களுக்கு அதிர்ச்சி தகவல் : மூன்று மாதத்தில் வருகிறது இரண்டு புதியவரி..!

மக்களுக்கு அதிர்ச்சி தகவல் : மூன்று மாதத்தில் வருகிறது இரண்டு புதியவரி..!

அரசாங்கம் எதிர்பார்த்த வகையில் விதிக்கப்பட்ட வரி மூலமான வருவாய் கிடைக்காத காரணத்தால் மேலும் இரண்டு புதிய வரியை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி செல்வ வரி மற்றும் பரம்பரை வரி ஆகிய இரண்டு புதிய வரிகளை அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மக்களுக்கு அதிர்ச்சி தகவல் : மூன்று மாதத்தில் வருகிறது இரண்டு புதியவரி | Two New Taxes Coming In 3 Months

நாட்டின் நிதி நிலைமையை ஆராய்வதற்காக புதிதாக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவினால் இந்த புதிய வரித் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வரிகளை வசூலிக்கத் தேவையான சட்டங்களை உருவாக்குவதற்கு நிதி அமைச்சு பொறுப்பாக உள்ளது.

பொது வருவாயை விட பொதுச் செலவு அதிகமாக இருப்பது அரசு எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகரித்துச் செல்லும் செலவு

மக்களுக்கு அதிர்ச்சி தகவல் : மூன்று மாதத்தில் வருகிறது இரண்டு புதியவரி | Two New Taxes Coming In 3 Months

இவ்வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தின் வருமானத்திற்கும் செலவீனத்திற்கும் இடையிலான இடைவெளி 1.24 பில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.