பணத்திற்காக நபர் ஒருவர் அடித்துக் கொலை..!

பணத்திற்காக நபர் ஒருவர் அடித்துக் கொலை..!

பிபில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெகம பிரதேசத்தில் உள்ள பாலைவனத்தில் நேற்று நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பிபில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மஹியங்கனை ஊரணிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பணத் தகராறு காரணமாக இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மற்றொருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மற்றைய நபர் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

கொலையை செய்த 35 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணத்திற்காக நபர் ஒருவர் அடித்துக் கொலை | Man Beaten To Death For Money Colombo

சடலம் பிரேத பரிசோதனைக்காக பிபில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.