திரிபோஷ பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

திரிபோஷ பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

இலங்கையில் 06 மாதங்கள் முதல் 03 வயது வரையிலான குழந்தைகளுக்கான மூன்று போஷாக்கு மேலதிக உணவு விநியோகம் பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

திரிபோஷ பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! | Thriposha Issue Will Be Resolved Next Week

இது குறித்து சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் வினவியதோடு, திரிபோஷ மீள் விநியோகம் தொடர்பில் அடுத்த வாரம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சுமார் ஒரு வருட காலமாக குழந்தைகளுக்கு திரிபோஷ விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.

எனவே, திரிபோஷ விநியோகத்தை விரைவில் தொடங்குமாறு அரசை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.