காரில் இருந்து குதித்தவர் சடலமாக மீட்பு.

காரில் இருந்து குதித்தவர் சடலமாக மீட்பு.

மொரட்டுவை - எகெடஉயன விஜயபுர பிரதேச கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (12) முற்பகல் கரையோதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

CCTV Colombo Beachசடலமாக மீட்கப்பட்டவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த பகுதிக்கு காரில் வந்து அங்கு காரை நிறுத்திவிட்டு கடலில் குதித்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. கமெராக்களில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, சடலமாக மீட்கப்பட்டவர் மஹரகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரெனவும் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது .

இந்நிலையில் அவரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .