தமிழர் பகுதியில் பெரும் சோக சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த நபர்.

தமிழர் பகுதியில் பெரும் சோக சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த நபர்.

திருகோணமலையில் கங்கை காட்டுப் பகுதியில் யானை தாக்கி நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் சடலத்தை இன்றைய தினம் (12-09-2023) மாலை குறிகாட்டுப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழர் பகுதியில் பெரும் சோக சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த நபர் | Person Killed In Trincomalee Attacked By Elephant

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் சேருநுவர - நீலாப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான வேலன் சமில் அப்சரா சில்வா என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கங்கைப் பகுதிக்கு மணல் ஏற்றுவதற்காக நேற்று திங்கட்கிழமை காலை சென்றுள்ளார்.

தமிழர் பகுதியில் பெரும் சோக சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த நபர் | Person Killed In Trincomalee Attacked By Elephant

இரவாகியும் அவர் வீடு வராததையடுத்து உறவினர்கள், கிராமத்தவர்கள் காட்டுப்பகுதியில் தேடுதல் மேற்கொண்டபோது குறித்த நபரின் சடலம் இன்று செவ்வாய்கிழமை பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் பெரும் சோக சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த நபர் | Person Killed In Trincomalee Attacked By Elephant

குறித்த இடத்திற்கு சேருநுவர பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எச்.குணரட்ண உள்ளிட்டோர் வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழர் பகுதியில் பெரும் சோக சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த நபர் | Person Killed In Trincomalee Attacked By Elephant