இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்: கணவனால் மனைவிக்கு நேர்ந்த சோகம்!

இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்: கணவனால் மனைவிக்கு நேர்ந்த சோகம்!

குருணாகலில் கணவனால் தாக்கப்பட்டு தீயூட்டப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வீரம்புகெதர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் ரஞ்சனகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்: கணவனால் மனைவிக்கு நேர்ந்த சோகம்! | Kurunegala Wife Beaten Set On Fire Husband Died

இதேவேளை, கடந்த மாதம் 27ஆம் திகதி, குறித்த பெண்ணின் கணவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதன்போது, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் மோதலாக மாறிள்ளது.

இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்: கணவனால் மனைவிக்கு நேர்ந்த சோகம்! | Kurunegala Wife Beaten Set On Fire Husband Diedஇந்நிலையில், கோபமடைந்த கணவர் தமது மனைவியை தாக்கியுள்ளதுடன், பெற்றோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.