தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் அரச வாகனங்கள்: புலனாய்வு அறிக்கை..!

தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் அரச வாகனங்கள்: புலனாய்வு அறிக்கை..!

அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரம் உத்தியோகபூர்வ வாகனங்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களது தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பெருமளவில் பணம் வீண் விரயமாகின்றமையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை சிலர் தங்களது தனியார் வாகனங்களை தாம் பணிபுரியும் நிறுவனத்துக்கு வாடகைக்கு வழங்கி அவற்றையும் தங்களது உத்தியோகபூர்வ வாகனங்களாக பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்களை தங்களது மனைவிகள் மற்றும் பிள்ளைகளின் பாடசாலை பயணங்களுக்கும் குடும்ப உறுப்பினர்களின் ஏனைய பயணங்களுக்கும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் அரச வாகனங்கள்: புலனாய்வு அறிக்கை | Investigation Report On Government Vehicles

மேலும், பாதுகாப்புப் படையினரின் சாரதிகள் குடும்ப உறுப்பினர்களின் பயணங்களுக்கு அரசாங்கத்தினால் பிரதானிகளுக்கு வழங்கப்படும் எரிபொருளை பயன்படுத்துவதாலும் இந்த பண இழப்பு இரட்டிப்பு மூன்று மடங்காக அதிகரிப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.