தொடருந்து சேவையை விரிவுபடுத்த இலங்கை மற்றும் இந்திய ஒப்பந்தம்..!

தொடருந்து சேவையை விரிவுபடுத்த இலங்கை மற்றும் இந்திய ஒப்பந்தம்..!

இலங்கையின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, இந்தியாவின் IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டது.

இலங்கை தொடருந்து சேவையின் மஹோ முதல் அனுராதபுரம் வரையிலான 66 கிலோமீட்டர் தூரம் பாதைக்கு  சமிக்ஞை விளக்கு அமைப்பை வடிவமைத்தல், நிறுவுதல், சோதனை செய்தல் என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. 

தொடருந்து சேவையை விரிவுபடுத்த இலங்கை மற்றும் இந்திய ஒப்பந்தம் | India Sri Lanka Sign 14 Mn Railway Agreement

14.90 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த ஒப்பந்தம் இலங்கையின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன, மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.