
வைத்தியர்கள் இன்றி அவதிப்படும் முல்லை வைத்தியசாலை!
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைக்கு செல்லும் நோயாளர்கள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுகின்றார்கள்.
இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் கேட்டபோது
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் 60 வைத்தியர்கள் பணியாற்றவேண்டிய இடத்தில் 27 வைத்தியர்களே பணிசெய்கின்றார்கள்.
இன்னிலையில் பொது மருத்துவ பிரிவில் ஒரு மருத்துவரே இரண்டு மருத்துவ விடுதி,இரண்டு மருத்துவ சிகிச்சைக்களினிக்,அவசர சிகிச்சைப்பிரிவு, மற்றும் கொரோனா தொற்று என்று சந்தேகிக்கப்பட்ட நோயாளர்களை கவனிக்கும் இடைநிலைப்பிரிவு ஆகியவற்றுக்கான சேவைகளை செய்து வருகின்றார்கள்.
தனி ஒரு மருத்துவரால் எல்லாப்பிரிவிற்கும் சேவைகளை வழங்கமுடியாது மருத்துவமனையில் வேறு பிரிவுகளில் மருத்துவர்கள் இன்றி விசேட வைத்திய நிபுணர்களால் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்னிலையில் கடந்த 20.09.2019 அன்று மருத்துவ சேவைகள் பணிப்பாளரினால் யாழ்போதனா வைத்தியசாலைப்பணிப்பாளருக்கு குறைந்தது நான்கு உள்ளக பயிற்சிகளை நிறைவுசெய்து நியமனத்திற்காக காத்திருக்கும் வைத்தியர்களை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு விடுவிக்குமாறு அறிவிக்கப்பட்டும் இதுவரை விடுவிக்கப்படவில்லை கடந்த காலங்களில் இரண்டு கிழமைகளுக்கு ஒருவர் என்று யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு மருத்துவர்கள் வந்து சென்றார்கள் இப்போது அவர்களும் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
இன்னிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை சங்க கிழையினரால் அனுமதிக்கப்பட்ட உள்ளக பயிற்சி நிறைவுசெய்த வைத்தியர்களை நியமிக்கும் வரை மருத்துவ விடுதிக்கான அனைத்து அனுமதிகளையும் நிறுத்திவைத்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்திய சாலையில் அவசர சிகிக்சைக்கா வருவோர் ஆரம்பகட்ட சிகிச்சையளிக்கப்பட்டு வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றார்கள்.
கடந்த 21.07.2020 அன்று தொடக்கம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இவ்வாறான நிலைமை தொடர்வதால் மக்கள் சிகிச்சையினை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
இவ்வாறு மருத்துவர்களின் இந்த பிரச்சனைக்கு 24 மணிநேரத்தில் சாதகமான பதில் கிடைக்காவிடின் முல்லதை;தீவு மாவட்ட அரச வைத்திய சங்கத்தினர் தாய் சங்கத்தின் அனுமதியுடன் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.