வவுனியாவில் வீதியை கடக்க முயன்ற மாணவனுக்கு முச்சக்கரவண்டியால் ஏற்பட்ட நிலை!

வவுனியாவில் வீதியை கடக்க முயன்ற மாணவனுக்கு முச்சக்கரவண்டியால் ஏற்பட்ட நிலை!

வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முயன்ற மாணவனை முச்சக்கரவண்டி மோதியதில் மாணவன் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (13-10-2023) மதியம் வேப்பங்குளம் 8ம் ஒழுங்கைக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் வீதியை கடக்க முயன்ற மாணவனுக்கு முச்சக்கரவண்டியால் ஏற்பட்ட நிலை! | Auto Hit A Student Trying To Cross Road Vavuniyaகுறித்த பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாகவுள்ள பாதாசாரிகள் கடவையின் ஊடாக குறித்த மாணவன் வீதியை கடக்க முயன்ற சமயத்தில் நெளுக்குளம் பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மாணவனை மோதியுள்ளது.

வவுனியாவில் வீதியை கடக்க முயன்ற மாணவனுக்கு முச்சக்கரவண்டியால் ஏற்பட்ட நிலை! | Auto Hit A Student Trying To Cross Road Vavuniya

விபத்தில் பாடசாலை மாணவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பிலான ஆரம்ப கட்ட விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.