விவசாயிகளுக்கு அடுத்த மாதம் முதல் இழப்பீடு.

விவசாயிகளுக்கு அடுத்த மாதம் முதல் இழப்பீடு.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு அடுத்த மாதம் முதல் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு அடுத்த மாதம் முதல் இழப்பீடு | Compensation Farmers Will Be Paid From Next Month

இந்த வருடம் 58,770 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக செய்கை வறட்சி காரணமாக அழிவடைந்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 53,965 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.