வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை.

இன்று பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவில் இடைக்கிடையில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் திணைக்களத்தினறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை | Warning Issued By Meteorological Departmentஎனவே பொதுமக்கள் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேசங்களில் பலத்த காற்று வீசுவதுடன் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.