புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.
இவ்வருட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் முதலில் இரண்டாவது வினாத்தாளுக்கு விடையளிக்க வேண்டுமென பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் லசிக சமரகோன் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சை இன்றைய தினம் (15) நடைபெறவுள்ள நிலையில், 3,37,596 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
2,888 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
உரிய நேரத்தில் மாணவர்களை பரீட்சை மத்திய நிலையங்களுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், அனர்த்தங்கள் அல்லது அவசர நிலை காரணமாக பரீட்சை நிலையத்திற்கு வர முடியாத மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.