காணித் தகராறில் பறிபோன சிறுவனின் உயிர் : தென்னிலங்கையில் பயங்கரம்.

காணித் தகராறில் பறிபோன சிறுவனின் உயிர் : தென்னிலங்கையில் பயங்கரம்.

இரு குடும்பங்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சிறுவன் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கம்பஹா - மீரிகமை பிரதேசத்தில் நேற்று (14.10.2023) இடம்பெற்றுள்ளது.

காணிப் பிரச்சினையால் இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி இறுதியில் கொலையில் நிறைவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில்15 வயதுடைய ஆர்.எம். சம்பத் என்ற சிறுவனே இவ்வாறு கத்தியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தந்தை உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காணித் தகராறில் பறிபோன சிறுவனின் உயிர் : தென்னிலங்கையில் பயங்கரம் | Boy Hacked To Death In Land Dispute Gampaha

மேலும் இச்சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.